முன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணினி மயமாக்கல் தொடர்பான விவரங்கள்

0
D1

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவையர்கள் அறிவது,  முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களுக்கான அனைத்து சேவைகள் மற்றும் பயன்பாடுகளும்  Online  மூலம் செய்யப்படவுள்ளது.  இதற்காக முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் விவரங்கள் (Online) கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுநாள்வரை 50 விழுக்காடு மட்டுமே பதிவாகியுள்ளதால், இதுவரையிலும் கணினி மூலம் பதிவு செய்யாதவர்கள் இனியும் காலந்தாழ்த்தாமல் 30-11-2019-க்குள் பதிவு செய்ய வேண்டும்.  தங்களது விவரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு எந்தவொரு நிதியுதவிகள், சான்றுகள் மற்றும் பயன்பாடுகள் பெறுவதில் இடையூறுகள் ஏற்படும்.

எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த, தங்களது விவரங்களை கணினியில் இதுநாள்வரை பதிவு செய்யாத முன்னாள் படைவீரர்கள்/ விதவையர்கள், தங்களது படைப்பணி விவரங்கள், ஆதார் எண். வங்கி கணக்கு எண், IFSC எண் email Id ஆகிய விவரங்களுடன், முன்னாள் படைவீரர் நல  உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில்  ஆஐராகி அதற்கான படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்குவதுடன் கீழ்காணும்  ஆவணங்களை ஒரே (CD) குறுந்தகட்டில் தனித்தனியாக பதிவு செய்து உடனடியாக சமர்ப்பித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

N2
  1. படைப்பணி புத்தகம்(Discharge Book) Pdf Format -ல் 2 MB –க்குள் இருத்தல் வேண்டும்.
D2
  1. பி.பி.ஒ(PPO) Pdf Format -ல் 2 MB –க்குள் இருத்தல் வேண்டும்.
  2. தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ; JPEG/ PNG/ JPG Format 1MB -க்குள் இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2410579, 9943838112 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.