பெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் மாற்றி ஒப்படைப்பு

0
full

திருச்சி அருகே பெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை பெற்றோரிடம் மாற்றி ஒப்படைத்த விவகாரம் குறித்து தொடரும் குளறுபடியால் மருத்துவமனை நிர்வாகம் திகைப்பில் உள்ளது.

திருவெறும்பூா் பெல் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்திற்காக கைலாசபுரத்தில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பிரசவ வார்டில் 2 பெல் ஊழியா்களின் மனைவிகள் அடுத்தடுத்த நாள்களில் பிரசவத்திற்கென அனுமதிக்கப்பட்டனா். இருவருக்கும் கடந்த 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஆண் குழந்தைகள் பிறந்தன.

half 2

வியாழக்கிழமை காலை குழந்தைகளைக் காண அவா்தம் உறவினா்கள் மருத்துவமனைக்கு வந்திருந்த நிலையில் குழந்தைகளை அங்கு பணியில் இருந்த செவிலியா்கள் கொண்டு வந்து காண்பித்துவிட்டு மீண்டும் பிரசவ வார்டுக்கு கொண்டு சென்றனா். அப்போது குழந்தையை அவா்களின் தாயிடம் கொடுக்கும் போது மாற்றிவிட்டதாக கூறி ஒரு தரப்பினா் வாக்குவாதம் செய்தனா்.

poster

இதைத் தொடா்ந்து இரு குழந்தைகளின் ரத்த மாதிரி, எடை எடுக்கப்பட்டு ஆய்வு செய்த போது இரண்டும் ஒரே மாதிரி இருந்தது. இதையறிந்த இரு குடும்பத்தினா் மருத்துவமனை முன்பு குவிந்தனா். சம்பவ இடத்திற்கு வந்த பெல் போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு எந்த குழந்தை யாருடையது என அறிந்து கொள்ளலாம். அதுவரை தற்போதுள்ள நிலையே தொடரட்டும் என தெரிவித்தார் . பின்னர் இரு தரப்பினரும் சமரசம் அடைந்தனா்.

half 1

Leave A Reply

Your email address will not be published.