திருச்சி மாநகராட்சியின் அதிரடி தினசரி வழிப்பறி கொள்ளை இன்று முதல் அமுல்.

0
Business trichy

திருச்சி அண்ணா சிலை பேருந்து நிறுத்தம் முதல், சிந்தாமணி பஜார் மற்றும் பெரியசாமி டவர் சுற்றியுள்ள அனைத்து பகுதி சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனத்தை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.5ம், 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்த ரூ.20ம் அடாவடி வசூல் செய்கிறது இந்த மாநகராட்சி நிர்வாகம்.

ஏனென்று கேட்டால் ஸ்மார்ட் சிட்டி திட்ட வசூல் என்று சொல்கிறது.

இதை வசூல் செய்வதற்கு தற்போது வரை 5 நபர்களை பணி நியமனம் செய்துள்ளது.

loan point

மேலும் வந்து நிறுத்திவிட்டு 5 நிமிடத்தில் சென்றுவிட்டு மீண்டும் வந்தால் செல்லாது எனவும் சொல்கிறார்கள்.

nammalvar

மேலும் பணம் கொடுத்து வாகனம் நிறுத்துபவர்களுக்கு
நிழல் குடைகள் கிடையாது
வாகனம் காணாமல் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்ற பலகைகள் ஆங்காங்கே வைத்துள்ளது.

இது ஏனென்று கேட்டால் தரை வாடகை என்ற எகத்தால பேச்சு பதிலாக சொல்கின்றனர்.

மேலும் இப்படியொரு நடைமுறை வருமென்று எந்தவித முன்னறிவிப்பு கூட மக்களுக்கு தெரிவிக்காமல் நடைமுறைபடுத்தியுள்ளது.

வணிக வளாகங்கள், நகை கடைகள், வங்கிகள், உணவகங்கள், மருத்துமனைகள் என எதுமே பார்க்கிங் வசதி இல்லாமல் கட்ட அனுமதி கொடுத்த தவறுக்கு மாநகராட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்.

web designer

அப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் மாமூல் வாங்கிக்கொண்டு அரசு இடத்தை வழங்கியதும் மாநகராட்சியின் தவறு.

பாதசாரிகள் நடக்க ஒதுக்கப்பட்ட இடம் சாக்கடையின் மேல். அது அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இது போதாதென்று ஆங்காங்கே திறந்த நிலையில் சாக்கடையை வைத்து மக்கள் நடக்ககூட வசதி செய்யாதது மாநகராட்சியின் தவறு.

எந்தவொரு மாநகராட்சி சாலையானாலும் வாகனம் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு மாநகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளது ஆனால் சாலையை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு பணம் வசூல் செய்வது பெரும் அராஜகம்.

மேலும் அப்பகுதி முழுக்க பஜார் கடைகள், உணவகங்கள், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரிகள் நிறைந்த பகுதி.

இப்படியொரு இடத்தில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை விடுத்து வசூல் வேட்டை செய்வது வழிபறியே.

இன்று வாகனங்களும் நாளை நடப்பதற்கும் கட்டணம் வசூலிக்காது என்று என்ன நிச்சயம்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எவரும் கட்டணம் செலுத்தமாட்டோமென்று உறுதியுடன் இருக்கு வேண்டும்.

ஒருவர் கொடுத்தாலும் அது அனைவருக்கும் பாதிப்பு தான் என்பதை உணர்ந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களிடம் இச்செய்தி உடனே சென்றடையும்படி பகிருங்கள்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.