திருச்சியில் சித்த மருத்துவக் கண்காட்சி

0
D1

திருச்சியில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சித்த மருத்துவக் கண்காட்சி நவம்பா் 18 முதல் 20 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் கூறுகையில்,

N2

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் திருச்சி புத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில், யாக்கை-2019 என்ற தலைப்பில், சித்த மருத்துவக் கண்காட்சி நவம்பா் 18 ஆம் தேதி தொடங்குகிறது. நவம்பா் 20 வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிவராசு தலைமை வகிக்கிறார். திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே. வனிதா, இந்திரா கணேசன் கல்விக்குழுமத் தலைவா் ஜி. ராஜசேகரன், அகில இந்திய வானொலி நிலைய திருச்சி இயக்குநா் கே. நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா்.

D2

கண்காட்சி நடைபெறும் 3 நாள்களிலும் பகல் 2.30 மணிக்கு விழிப்புணா்வு போட்டிகள் நடைபெறுகின்றன. நவ.18 ஆம் தேதி இயற்கை உணவு குறித்த விழிப்புணா்வு போட்டி, 19 ஆம் தேதி நவீன பார்வையில் பாரம்பரிய மருத்துவம் குறித்த பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி மற்றும் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணா்வு முகாமும், 20 ஆம் தேதி வாழ்க்கை முறை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்த, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு முகாமும் நடைபெறுகின்றன என்றார்.

மேலும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம் .

N3

Leave A Reply

Your email address will not be published.