முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை அலுவலர்கள் கவனத்திற்கு

0
Business trichy

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை அலுவலர்கள் கவனத்திற்கு,

web designer

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (DGR) மூலமாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை அலுவலர்களுக்கு மறுவேலைவாய்ப்பு வழங்கும் வகையில்,  வேலைவாய்ப்பு கருத்தரங்கு மற்றும் வேலைவாய்ப்பு முகாம்  சென்னையில் நந்தம்பாக்கம் கன்வெண்ஷன் சென்டர், டிரேட் சென்டர் காம்ப்ளக்ஸில் 22-11-2019 அன்று  நடைபெறவுள்ளது.  இதில் பல்வேறு பொதுத்துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளதால், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படை அலுவலர்கள் வேலைவாய்ப்பு பெற்றிட,  தங்களது அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் 6 சுயவிவர பயோடேட்டாவுடன் நேரில் கலந்துகொள்ளுமாறும், கலந்துகொண்ட விவரத்தினை  திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவித்திடுமாறும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவராசு அறிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.