முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித் தொகை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் கவனத்திற்கு,
முன்னாள் படைவீரர் நலத்துறை வாயிலாக பல்வேறு கல்விகள் பயிலும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு, தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2019-20ம் கல்வியாண்டிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய முப்படைவீரர் வாரியத்தில் (KSB) விண்ணப்பிக்காதவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்வி, தொழிற்கல்வி, பல்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஒன்று முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிகளில் பயிலும் முன்னாள் படைவீரர் சிறார்களின் பெற்றோர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் திரும்பவும் சமர்ப்பித்து, கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளவும் என்றும், இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தெரிவித்துள்ளார்

கல்வி உதவித்தொகை விவரம்:
கலை மற்றும் அறிவியல் கல்வி – ரூ.10,000/-, தொழிற்கல்வி – ரூ.25,000/-, பல்தொழில்நுட்பக் கல்வி – ரூ.20,000/-, 1 முதல் 5ம் வகுப்பு வரை – ரூ.500/-, 6 முதல் 8ம் வகுப்பு வரை – ரூ.800/-, 9 முதல் 10-ம் வகுப்புவரை – ரூ.1,000/-, 11 முதல் 12-ம் வகுப்புவரை – ரூ.1,500/- .
