திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு சிறப்பிதழ் வெளியீடு”

0

நேற்று (14.11.2019) மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையில்  “ஆத்மா மனநல மருத்துவமனை” வழங்கும் “உலக மனநல தின விழிப்புணர்வு சிறப்பிதழை” டிரஸ்ட் சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் தலைவரும், ஆத்மா சிறப்பு பள்ளியின் துணைத் தலைவரும், மரங்களின் நண்பர்கள் இயக்கத்தின் தலைவரும், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான Dr.கலையரசன் வெளியிட அதனை தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுபாஷ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் பாலாஜி, ராஜபாளையம் பத்திரிக்கையாளர் ஜெகதீஸ்வரி, சிந்துஜா மருத்துவமனையின் அபிராமி பாராமெடிக்கல் நர்சிங் கல்லூரி முதல்வர் லதா, சிந்துஜா மருத்துவமனையின் டயாலிஸிஸ் டெக்னீசியன் செந்தில் குமார், மரங்களின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ஆத்மா குழுமங்களின் பொது மேலாளர் சாலைக்குமரன், சாந்திவனம் இயக்குநர் அரசப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.