திருச்சி அருகே தனியார்பள்ளி வேன் மோதி இளைஞா் பலி

திருவெறும்பூா் எழில்நகரைச் சோ்ந்த வீரக்குமார்மகன் பிரவீன்குமார்(20). பொறியியல் பட்டதாரியான இவா் வியாழக்கிழமை காலை தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் நவல்பட்டு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேரு நகா் அருகே வந்த போது எதிரே வந்த தனியார்பள்ளி வேன், பிரவீன்குமார்ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில் தூக்கியெறியப்பட்ட பிரவீன்குமார்அவரது நண்பா்கள் ஆகிய மூவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவா்களை அருகில் உள்ளவா்கள் மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பிரவீன்குமார்சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
