திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை அதிகரிப்பு தொடரும் அவலங்கள்

0
Business trichy

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை அதிகரிப்பு
தொடரும் அவலங்கள்!!!

கடந்த அக்-13 தேதி திருச்சி தா.பேட்டை அருகே இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தனபிரியங்கா தேவி தனது வகுப்பு மாணவர்களின் முன்னாள் தாவரவியல் ஆசிரியர் கொச்சை வார்த்தைகள் பேசி திட்டியதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சமீபத்தில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை, திருச்சி கே.கே.நகர் அய்மான் கல்லூரியில் ஜார்கண்ட மாணவி ஜெப்ரான்பர்வீன் தற்கொலை, உறையூர் நர்சிங் கல்லூரியில் சுனித்தா தற்கொலை இன்று பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நிலவியல்துறை இரண்டாம் மாணவி கீர்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பினாயில் குடித்து தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த மாணவிகள் தற்கொலை கல்வி நிலையங்களில் நடக்கும் டார்ச்சர் தான் என்பதையே உணர்த்துகிறது.

Full Page

நேற்று நவ-16 மதியம் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவி கீர்த்திகா திடீரென பாத்ரூமிற்கு சென்று பினாயில் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்களிடம் பேசுகையில் இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர் மாணவி கீர்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பாரதிதாசன் பல்கலைகழத்தில் விடுதியில் தங்கி படித்துவருவதாகவும்,

நிலவியல் துறைத்தலைவர் சக்திவேல் கடந்த இரண்டு மாதங்களாக கீர்த்திகா மட்டுமல்லாமல் சக மாணவிகளிடமும் செல்போன்களை வாங்கி மிரட்டி வந்ததாகவும், தான் சொல்வதை செய்யாவிட்டால் உங்களின் பெற்றோரிடம் தவறான புகார் அளித்துவிடுவதாகவும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் படிக்காமல் ஊர் சுற்றி வருவதாகவும் புகார் அளிப்பேன் என்று மிரட்டியுள்ளார். அதில் பெருமளவு பாதிக்கப்பட்ட மாணவி கீர்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடிதம் எழுதி வைத்து விட்டு பினாயில் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நண்பர்களே சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்ததாக கூறினர்.

திருச்சியில் கடந்த ஒருவாரத்தில் தொடர்ந்து பள்ளி , கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Half page

Leave A Reply

Your email address will not be published.