சேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் அக் – 02 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது 

0

சேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த அக் – 02 அன்று காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது 

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்றும் மஹாத்மா காந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

food

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதனைத்தொடர்ந்து  திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த அக் – 02 அன்று காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சாமிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மனோகரன், பெட்டவாய்த்தலை பேங்க் ஆப் இந்தியா(அக்ரி) அலுவலர் மோகனப்பிரியா மற்றும் சேவை நிறுவன இயக்குனர். கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என 500 கும் மேற்பட்டோர் பங்குப்பெற்றனர். இந்நிகச்சியில் உணவு வழங்கப்பட்டு காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது.   

gif 4

Leave A Reply

Your email address will not be published.