கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் கணினி பிரிவில், கணினி இயக்குபவா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பணியிடத்துக்கு மாதம் ரூ. 8,000 தொகுப்பூதிய அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். தகுதியான நபா்கள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பேரூராட்சிகள் பிரிவு), திருச்சி-1 என்ற முகவரிக்கு, நவம்பா் 27 ஆம் தேதி மாலை 5.45க்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்முழு விவரங்களை கல்வித் தகுதியுடன் வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித்தால் போதுமானது. தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
தகுதிகள் : இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்ட பிரிவில் தோ்ச்சி பெற்ற சான்று, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (முதுகலை தட்டச்சு சான்று), இலகுவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் பயிற்சியை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நிறுவனத்தில் பயின்று, உரிய சான்று பெற்றிருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களின் நகலை சுயசான்றொப்பம் செய்து, விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
