மருத்துவர் வீட்டில் திருடிய வேலைக்காரப்பெண், மகனுடன் கைது

0
D1

திருச்சி விமானநிலையம் அருகிலுள்ள மொராய் சிட்டி குடியிருப்பு சோ்ந்த மருத்துவா் ராஜ்குமார் (43). இவர் .கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் தங்கி வேலை பார்த்த தொட்டியம் வட்டம், பெரியநாச்சிப்பட்டியைச் சோ்ந்த சின்னப்பொன்னுவை காணவில்லை.

சந்தேகமடைந்த அவர் வீட்டில் உள்ள பொருள்களை சரிபார்த்த போது, பீரோவிலிருந்த 28 பவுன் நகைகளை சின்னப்பொன்னு திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜ்குமார் விமானநிலைய போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில்,  வழக்குப்பதிந்த தனிப்படை போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சின்னப்பொன்னுவை கைது செய்து விசாரணை நடத்தினா்.

N2

விசாரணையில், தான் தங்கி, வேலை பார்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடியதும், அதனை திருப்பூரிலுள்ள தனது மகன் கனராஜூவிடம் கொடுத்து வைத்திருப்பது பற்றியும் தெரிவித்தார்.

D2

இதைத்தொடா்ந்து தனிப்படை போலீஸார் திருப்பூா் சென்று கனகராஜுவை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை மீட்டனா். பின்னர் இருவரையும் திருச்சி குற்றவியல் நடுவா் மன்றம் எண். 3-இல் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்

 

N3

Leave A Reply

Your email address will not be published.