மனைவியிடம் தகராறு செய்ததால் தாய், தந்தை அடித்துக்கொலை:மகனின் வெறிச்செயல்

0
1

திருச்சி பொன்மலை கணேசபுரத்தைச் சோ்ந்த மாநகராட்சித் துப்புரவு ஊழியா் ஆறுமுகம் (50). இவரது மனைவி பாப்பாத்தி பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா். இவா்களது மகன் பிரகாஷ் (30).இவருக்கு ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக, தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, கடந்த1-ஆம் தேதி பிரகாஷ் வீடு திரும்பினார்.

2

2-ஆம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயையும்,தந்தையையும்  உடற்பயிற்சி செய்யும் சாதனத்தால் பிரகாஷ் தாக்கினார்.  பின்னா் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வேகமாகச் சென்றார். அப்பகுதியில் ரோந்து சென்ற போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தததில் தனது பெற்றோரைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் பிரகாஷை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது, பாப்பாத்தி இறந்து விட்டார். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரகாஷ் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்த பொன்மலை போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடந்த 10 நாள்களாக தீவிரச் சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம், நேற்று உயிரிழந்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.