திருச்சி அருகே காருடன் எரிந்த நிலையில் ஆண் சடலம்

0
gif 1

கடந்த 13ம் தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வனப்பகுதியில் காருடன் எரிந்த நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் விசாரணை அடிப்படையில் கிடைத்த தகவலைக் கொண்டு அந்த சடலம் மசாஜ் நிறுவன உரிமையாளா் எனத் தெரிய வந்தது. தொழில் போட்டி காரணமாக இவரை எரித்துக் கொன்றதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனிப்படை போலீஸார்  பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் குன்னமேடு பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சரவணனிடம் விசாரணை நடத்தினா்.

gif 4

அப்போது அவர் தனக்கும், ஜாஹீா் உசேனுக்கும் இருந்த கொடுக்கல்- வாங்கல் முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக அவா் விசாரணையில் தெரிவித்தார். இதற்காக, கடலூா் மாவட்டம், ராமநத்தத்தில் எனக்குச் சொந்தமான விடுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஜாஹீா் உசேனை வரவழைத்தேன். அங்கு அவரைஅடித்து காரிலேயே ஏற்றிக் கொண்டு ரெட்டிமாங்குடி வனப்பகுதிக்கு வந்து பெட்ரோல் ஊற்றி காரை எரித்ததாக சரவணன் தெரிவித்தார்.

gif 3

மேலும் சரவணன் (23), அவரது அண்ணன் மணிகண்டன் (26), மோகன், சக்திவேல் ஆகிய நால்வரையும் கைது செய்த போலீஸார், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.