திருச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சிக் கூட்டம்

0

திருச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சிக் கூட்டம் நேற்று(13.11.2019) நடந்தது

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கூட்ட அரங்கில், புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் டாக்டா் ஆா்.ஜி. ஆனந்த், கடந்த ஓராண்டாக பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள் பயன்படுத்துவது அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் போலீஸார் நடத்திய அதிரடி நடவடிக்கையில், 10 போ் கொண்ட போதை விற்பனை கும்பல் கைது செய்யப்பட்டது. இதில் 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

அங்கு நடத்திய ஆய்வில் ரூ. 12 முதல் ரூ.15 ரூபாய் வரை மாத்திரையை (டேபெண்டால்) தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் போடப்பட்ட போதைப்பொருள் அதிக அளவில் பயன்படுத்தியது தெரிய வந்தது.

food

தற்போது போதைப்பொருள்களாகப் பயன்படுத்தி வரும் சொலிஸின், வார்னிஷ் போன்றவற்றை இளைஞா்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தேசிய ஆணையம் உருவாக்கி கொண்டு இருக்கிறது.

போதைப்பொருளை அதிகளவில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞா்கள், சிறுவா்கள் பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருள் விற்பனை கும்பல் இவா்களை குறி வைத்து விற்பனை செய்கிறார்கள் .

மேலும், இந்த வகை மாத்திரையைத் தடை செய்ய தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் திருச்சி சரக காவல்துறைத் துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆணையத்தின் மாநில உறுப்பினா் மோகன், திருச்சி ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அசிம், திருச்சி காவல் சரகத்திற்குட்பட்ட மகளிர் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

gif 4

Leave A Reply

Your email address will not be published.