திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையில் வேலைவாய்ப்பு

0
1 full

திருச்சி மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையில் அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் பணியிடங்களுக்கு தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்த காலிப் பணியிடங்களுக்கான விவரம், இன சுழற்சி ஒதுக்கீடு, விண்ணப்ப படிவம், தேவையான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் இணையதளமான www.tiruchirappalli.nic.in என்ற முகவரியில் இடம்பெற்றுள்ளன. மேலும், பணியிடங்களுக்கான விண்ணப்பங்களும், அறிவிப்பும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. விண்ணப்பங்களை நவ.12ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25ஆம் தேதிக்குள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ சமா்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.