திருச்சியில் சைல்டுலைன் -1098 அமைப்பின் மூலம் தேசிய ‘குழந்தைகள் தின – வார நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் நலத் தலைவர் துவக்கிவைத்தார்

0
D1

திருச்சியில் சைல்டுலைன் -1098 அமைப்பின் மூலம் தேசிய ‘குழந்தைகள் தின – வார நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் நலத் தலைவர் துவக்கிவைத்தார்.

இந்தியாவில் இவ்வாண்டு 2019- ல்  குழந்தைகள் தின விழா சிறப்பிக்கும் விதமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு வாரம் முழுவதும் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் திருச்சியில் இன்று நவ-13 திருச்சி மாவட்ட சைல்டு லைன் (1098) மூலம்  குழந்தைகள் தின விழா துவக்கவிழாவாக சிறப்பிக்கப்பட்டது.

D2
N2

திருச்சி கலையரங்க அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சைல்டுலைன் மையத்தில் இந்த நிகழ்ச்சியின் துவக்கவிழா நடைப்பெற்றது. சேவை இல்ல குழந்தைகள் மகிழ்வுடன் கலந்துக்கொண்டனர். குழந்தைகள் நலக்குழு தலைவர் கமலா தனது தலைமையுரையில் ‘குழந்தைகளை கொண்டாடுவோம்’ என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்.

 சைல்டுலைன் -1098 மூலம் சிறப்பாக தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு அட்டையை வெளியிட சைல்டுலைன் இயக்குனர் சேவை கோவிந்தராஜன் பெற்றுக்கொண்டார். முன்னதாக குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களுக்கு ‘குழந்தைகள் நண்பன்’ என்ற கைப்பட்டையை அணிவித்தனர். விழாவில் கலந்துக்கொண்டவர்களை சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குனர் பேராசிரியர். காட்வின் பிரேம் சிங் வரவேற்றார். குழ்நதைகள் நலக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர்.ஞானவேல் வாழ்த்துரை வழங்கினர்.

 சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் முரளிகுமார் மற்றும் நோடல் ஒருங்கிணைப்பாளர் நவீன் பாலாஜி, மற்றும் சைல்டுலைன் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சைல்டுலைன் 1098-ன் இயக்குனர் சேவை. கோவிந்தராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பலூன் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 

N3

Leave A Reply

Your email address will not be published.