கபீா் புரஸ்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

நமது நாட்டுக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கபீா் புரஸ்கா் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
இதன்படி, இந்த ஆண்டிற்கான கபீா் புரஸ்கா் விருதுக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். விருதிற்கான விண்ணப்பம், முக்கிய விவரங்களை www.sdat.tn.gov.in. என்னும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வரும் நவ.25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் பெறப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பங்கள் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் அண்ணா விளையாட்டரங்கத்தில் நேரிலும், 0431-2420685 என்னும் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
