விரைவில் ஐடி கம்பெனிகளில் 2 லட்சம் பேர் வேலைக்கு தேர்வு

0
D1

ஐடி நிறுவனங்களில் விரைவில் 2 லட்சம் பேர் புதிதாக வேலை தேர்வு செய்யப்பட உள்ளதாக இன்போஸிஸ்ஸின் முன்னாள் நிர்வாகத் துணைத் தலைவரும், ஆக்ஸிலர் வென்சர்ஸ் தலைவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறினார்.

திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி வளாகத்தின் கணிப்பொறி சேவைக் குழுமம் 1985ம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டிலுள்ள கணிப்பொறி ஆய்வகங்களில் இன்று வரை குறைந்த செலவில் உயரிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய உயரிய மையமாக திகழ்கிறது. 1987ம் ஆண்டில் நாட்டிலேயே முதலாவதாக வளாக கணிப்பொறிகளை தகவல் தொடர்பு கம்பி இணைப்புடன் கூடிய வலைப்பின்னல் வழியாக இணைத்து மாணவர்களுக்கும் வளாக கணிப்பொறி பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கியது.

1990ல் (எண்கோண்) எனும் கணிப்பொறி ஆய்வகத்தையும் அதன் தொடர்ச்சியாக 2004ல் (இரு வலை) கணிப்பொறி ஆய்வகத்தைக் கொண்டு வளாகத்திலுள்ள 6ஆயிரத்து 500 மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்களும் பயனடைந்து வருகின்றனர்.

D2
N2

தற்போது என்ஐடி கணிப்பொறி சேவைக் குழுமத்தின் அடுத்த இணைப்பான “மூன்றாம் ஐ” என்ற கணிப்பொறி ஆய்வகத்தை இன்போஸிஸ்ஸின் முன்னாள் நிர்வாகத் துணைத் தலைரும், ஆக்ஸிலர் வென்சர்ஸ் தலைவருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். என்ஐடி இயக்குனர் மினிஷாஜிதாமஸ் முன்னிலை வகித்தார்.

பின்னர்  கிரிஸ்கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் , :தகவல்தொழில் நுட்பத்தில் தற்போது ஆட்குறைப்பு  நடக்க கூடாது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். இந்த தகவல் தொழில் நுட்பசரிவு உலக அளவில் உள்ளது. இது மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.

விரைவில் ஐடி கம்பெனி வேலைக்கு 2 லட்சம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்க உள்ளனர். ஐடி கம்பெனி மூலம் இந்தியாவில் 185 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது. இதில் 140 கோடி ஏற்றுமதி ஆகும். பின்னர் என்ஐடி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை கிரிஸ்கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டு, அதனைப்பற்றி மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்

N3

Leave A Reply

Your email address will not be published.