பணியின்போது வேன் டிரைவர் மரணம்: மனைவி இழப்பீடு வழங்ககோரிக்கை

0
1 full

திருவெறும்பூரில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவர் பணியின்போது மரணமடைந்தால் பள்ளி நிர்வாகத்திடமிருந்து இழப்பீடு கோரி டிரைவர் மனைவி நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

திருவெறும்பூர் நடராஜபுரம் நடுத்தெருவில் வசித்த மனோகரன் திருவெறும்பூர் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக இருந்தார். அவரது மனைவி லட்சுமி. இவர் கடந்த ஜூலை மாதம் பள்ளி வேனை ஓட்டிச்சென்ற போது தீடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டார். இதனால் பள்ளி குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பின்னரஅவரை மருத்துவனைக்குகொண்டு சென்று பரிசோதித்தபோது அவெர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் தனது குடும்பத்திற்கு எந்த ஒரு இழப்பீடும் தரவில்லை எனவும், தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நிவாரணம் வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி வேன் டிரைவரின் மனைவி லட்சுமி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

 

3 half

Leave A Reply

Your email address will not be published.