திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரிக்கு 1 இலட்சம் அபராதம் ஏன் தெரியுமா ?

0
Business trichy

திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரிக்கு 1 இலட்சம் அபராதம் ஏன் தெரியுமா ?

 

திருச்சி அரசு மருத்துவனையில் புதிதாக பொறுப்பேற்ற டீன் மருத்துவர் வனிதா பத்திரிகையாளர்களிடம் திருச்சி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

 

இந்த நிலையில்  திருச்சி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தினமும் மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் அதிகம் பாதிக்கப்பட்ட கிடைத்ததே தற்காலிக வசூலிக்கும் பணியாளர்கள் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

 

loan point
web designer

இங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மற்றும் ஏடிஸ் கொசு புழுக்கள் வளர ஏதுவான ஆதார நிலைகளை கண்டறிந்து அழிக்கும் பணி, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி , குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கும் பணி,  பிளீச்சிங் பவுடர் வழங்குதல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல், துப்புரவு பணி மேற்கொள்ளுதல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துதல், காய்ச்சல் கண்டு அவர்களை கணக்கெடுத்தல் முதலிய பணிகளைச் செய்து வருகின்றனர்.

 

nammalvar

திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள  பிஷப் ஹீபர் கல்லூரியில்  டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க தவறியதற்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு உள்ளது.

 

திருச்சியில் அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலில் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில்  நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து டெங்கு கொசுக்களை ஒழிக்க மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையர் சிவசுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சியின் பியூட்டி பிஷப் என்று பெயர் எடுத்த கல்லூரிக்கு இந்த நிலையா என்று அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.