திருச்சியில் மரபுவழி சித்த மருத்துவர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

0
1 full

மரபுவழி சித்த மருத்துவர்கள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் செயல் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மரபுவழி சித்த மருத்துவர்கள் கண்ணன், அப்பாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைவர் பழனிசாமி, ஆலோசனை குழு தலைவர் கேசிபா ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், கோரிக்கை குறித்தும் வலியுறுத்தி பேசினார். அப்போது பரம்பரை மருத்துவர்களுக்கு அரசு மருத்துவ அனுபவ சான்று வழங்கவேண்டும்,

2 full

வனப்பகுதிகளில் மூலிகை பறிப்பதற்கு அரசு மரபுவழி சித்த மருத்துவர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும், 50 வயதை கடந்த சித்த மருத்துவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கவேண்டும், மூலிகை மற்றும் அதன்பயன்பாடு, மூலிகை மருத்துவம் குறித்து தொடக்கப்பள்ளி முதலே தனிபாடம் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழகஅரசு நிறைவேற்றிட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.