திருச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்

0
Full Page

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் %லம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

14.11.2019ம் தேதி மணப்பாறை     ஆனாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,

15.11.2019ம் தேதி இலால்குடி வாளாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,

16.11.2019ம் தேதி திருவெறும்பூர்   துவாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்,

18.11.2019ம் தேதி துறையூர்  துறையூர்  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும்

Half page

19.11.2019ம் தேதி முசிறி     புலிவலம்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும்

20.11.2019ம் தேதி திருச்சிராப்பள்ளி- மேற்கு    திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி அண்ணாநகர் கிளையிலும்,

21.11.2019ம் தேதி ஸ்ரீரங்கம்   சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் நடைபெற உள்ளது.

தனிநபர் கடன் திட்டம்-(1)-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமல் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் மற்றும் தனிநபர் கடன்  திட்டம்-(2)-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000/-க்கு மிகாமல் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகித்திலும் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையினர் மாணவ-மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலைத்; தொழிற்கல்வி/ தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.20 இலட்சம் வரையிலும் 3% வட்டி விகிதத்தில் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று,உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம்(போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) , கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/செலான்  (original) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமாப்பிக்க வேண்டும்.

இச்சிறப்பு முகாம்களில் சிறுபான்மையினர்கள் கலந்து கொண்டு  கடன் உதவி பெற்று பயன் பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.