கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

0
full

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறுபான்மையினர் இன மாணவ மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர்,சீக்கியர் புத்தமதத்தினர் பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு/அரசு உதவி பெறும் மற்றும் மைய/மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ/மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் வழங்கப்பட உள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ/மாணவியர்கள் 15.11.2019 வரையிலும் பள்ளி மேற்படிப்பு திட்டத்திற்கு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 15.11.2019 வரையிலும் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

poster

இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ/ மாணவியர்கள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணநகல்களை இணைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ/மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

 

ukr

இணைய தளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்யவேண்டும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்ற/திருத்த இயலாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதியான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலுருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

பள்ளிகள் /கல்வி நிலையங்கள் : மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில்(NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE / AISE / NCTV குறியீட்டு எண் அவசியமாகும். புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (NODAL OFFICER) விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இரு நகல்களில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

இவ் உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்,ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விளம்பரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemsminorities.htm என்ற இணையதளத்திலும், மேலும் இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.inஎன்ற இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகுந்த விபரம் பெறலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு  தெரிவித்துள்ளார்.

 

 

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.