உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தயாராக இருக்கிறதா? கலெக்டர் ஆய்வு

0
Full Page

உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தயாராக இருக்கிறதா? என அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. திருச்சி மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 1,142 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன் படுத்தப்பட உள்ளன.

Half page

இந்த தேர்தலில் பயன் படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு தயாராக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொது இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுவது வழக்கம். இதற்காக 150 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் இருந்து வந்திருந்த பாரத மின்னணு தொழிற்சாலை என்ஜினீயர்கள் சரிபார்க்கும் பணியில்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டரின் உதவியாளர் (தேர்தல்) பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.