“தூய்மை தூதுவர்” – விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கோ. அபிஷேகபுரம் கோட்டத்திற்க்குட்பட்ட வார்டு எண் 52ல் உள்ள காவேரி குளோபல் பள்ளியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆணையர் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தங்கள் வீடுகளுக்கு வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். தங்கள் வீடுகளில் முறையாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் மாணவர்களை மாநகராட்சியின் மூலம் “தூய்மை தூதுவர்” என்று அடையாள அட்டை வழங்கி கௌரவிக்கப்படும். நம் வீடுகளில் உருவாகும் குப்பைகளுக்கு நான் தான் பொறுப்பு “My Waste My Responsibility” என்று கூறினார்

தங்கள் வீட்டில் உபயோகமற்ற பொருட்களை மழை நீர் தேங்கா வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், டெங்கு நோய் பரவும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆகுவதால் தங்கள் இல்லங்களில் சேமிக்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர்சாதனப்பெட்டிகள் , உரல், ஆட்டுகல், கொட்டாங்குச்சி போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான நெகிழிகளை (பிளாஸ்டிக்) பயன்படுத்துவது குற்ற நடவடிக்கை எனவும், மீறி பயன்படுத்துபவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்றும். இதனால் சுற்றுச்சுழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. “நெகிழியில்லா தமிழகத்தை” உருவாக்குவோம்! என்றும் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர். ஜெகநாதன் , உதவி ஆணையர்கள், சி.பிரபாகரன், எஸ்.வைத்தியநாதன், ஆர்.திருஞானம் மற்றும் அனைத்துக் கோட்ட சுகாதார ஆய்வர்/அலுவலர்கள் மற்றும் அனைத்துக் கோட்ட துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
