வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்க ஒரு வாய்ப்பு

0

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டும் தமிழக அரசின் குறு, சிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் மாவட்டந்தோறும் இயங்கிவரும் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறிட பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோரை மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்;டுத்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற்றுதொழில் தொடங்கிட உதவிகள்  செய்யப்பட்டு வருகிறது.

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரைமுதலீட்டுமானியமும், அந்நிறுவனங்களின் மின் கட்டணத்தில் 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மின் மானியமும், புதியதாக மின்னாக்கி வாங்கி நிறுவும் நிறுவனங்களுக்கு மின்னாக்கியின் மதிப்பில் 25சதவீதம் மின்னாக்கி மானியமாகவும், ஆற்றல்; தணிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆற்றல் தணிக்கைக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் ரூ.75,000க்கு மிகாமல் ஆற்றல் தணிக்கை மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

புதியதாக தொழில் தொடங்க வரும் தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து உரிமங்கள் மற்றும் அனுமதிகளை குறித்த காலத்திற்குள் இணையதளம் வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளரதகவு மூலமாக விரைவாக பெறப்பட்டு வழங்கப்படும்.

மாவட்டதொழில் மையத்தின் மூலமாக தொழில் முனைவோர்களுக்காக நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்க ஏதுவாக வரும் 12.11.2019 அன்றுகாலை 09.00 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திட்டவிளக்க முகாம் ஒன்று நடைபெறும். அம்முகாமில் முன்னோடி வங்கி மேலாளர், சிட்கோ கிளை மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க தலைவர், வங்கி அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றவுள்ளனர். ஆர்வமுள்ள தொழில் ஆர்வலர்கள் இந்த ஊக்குவிப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.