பச்சைமலை பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
gif 1

பச்சைமலை பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழகத்தில் சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளே என்கின்றனர். குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் பெண்சிசுக்களை பணத்திற்கு விற்பது என பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

 

gif 3

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் சமீபத்தில் துறையூர் ராசிபுரம் அருகே 2 வது பிரசவம், 3 வது பிரசவத்திற்கு வரும் பெண்களை குறிவைத்து அவர்களிடமிருந்து குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்த்தராகராக மருத்துவமனையின் செவிலியர் செயல்பட்டதால் அவரை கைது செய்ததுடன் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணப்பாறை அருகே பிறந்த குழந்தையை விற்பதற்கு மருத்துவமனையின் ஊழியரே இடைத்தரகராக இருந்து காணப்பட்டுதன் அடிப்படையில் அப்பெண் கைது செய்யப்பட்டார். மேலும் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும், இவற்றையெல்லாம் தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இதுப்போன்ற சட்டத்திற்கு புரனாக செயல்படும் நபர்கள் மீது அரசு நடவடிக்கைகளும் மேற்கொள்கின்றனர். இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் பேசியபோது… திருச்சியில் பொறுத்தவரை ஆரம்பத்தில் குழந்தை திருமணம் சில குறிப்பிட்ட பகுதிகளான துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் போன்ற பகுதிகளில் பெருமளவு காணப்பட்டு வந்தது. அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றையெல்லாம் தடுத்தி நிறுத்தி வருகின்றோம் . மேலும் குழந்தை விற்பனை போன்றவைகள் பெரும்பாலும் பச்சைமலை உட்பட்ட பகுதிகளில் காணப்பட்டு வருவதால் அதனையும் தடுக்கும் விதமாக அங்குள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

gif 4

அதனைத்தொடர்ந்து நேற்று (08/11/2019) திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா பச்சைமலை அருகேயுள்ள செம்புலிச்சாம்பட்டி மற்றும் சின்ன இலுப்பூர் கிராமங்களில் இயங்கிவரும் பழங்குடியினர் அரசு பள்ளி மாணவ / மாணவியருக்கு மாவட்ட பழங்குடியினர் நலத் துறை சார்பாகவும் குழந்தைகள் உதவி எண் 1098 (சைல்டு லைன்) மூலம் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திட்டஅலுவலர் ரெங்கராஜன், துறையூர் தாசில்தார் கண்ணன், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தம்முனிசா, மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலர்கள் கீதா,பிரியதர்சினி, மற்றும் திருச்சி மாவட்ட சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிகுமார் (நிறுவனம் -சேவை ), மற்றும் (நோடல்) நகர ஒருங்கிணைப்பாளர் நவீன் பாலாஜி (நிறுவனம் -பிஷப் ஹீபர் கல்லூரி) ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் துன்புறுத்தல், போன்ற குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை குறித்து விளக்கம் கொடுத்து விழிப்புணர்வு அளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பச்சைமலையில் உள்ள ஏரிக்காடு, எருமைப்பட்டி, மருதை, கிணத்தூர், சினையூர், நெசக்குளம், ராமநாதபுரம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளிலிருந்தும் மாணவ/ மாணவியர்கள் கலந்துக்கொண்டு 500 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கரங்களால் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

gif 2

Leave A Reply

Your email address will not be published.