தொடுதிரை மூலம் கல்வி வழங்கும் சுப்பையா நடுநிலைப்பள்ளி.

தொடுதிரை மூலம் கல்வி வழங்கும் சுப்பையா நடுநிலைப்பள்ளி.
நவ9- திருச்சி சுப்பையா நடுநிலைப்பள்ளி அரசு வழங்கும் சலுகைகளுடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களும் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்து வருகின்றார்கள். தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப
பள்ளி மாணவர்கள் பலன் பெறும் வகையில்

தொடுதிரை முறையில் கல்வியினை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். இத்தொழில்நுட்பம் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்திரித்துள்ளது.
தொடுதிரை வாங்குவதற்காக தலைமையாசிரியர், ஆசிரியர்கள் தனது மாத ஊதியத்தின் ஒருபகுதியை செலவழித்தும் ,ரோட்டரி சங்கம் மூலமாக உதவி பெற்றும் பள்ளியில் ஒரு தொடுதிரை , ஒரு காட்சித் திரை அமைத்து
ஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது. யூடியூப் வீடியோக்கள், பாடல்கள், தொடுதிரைவழிக் கல்வி எனப் புதியதோர் உலகுக்குள் உற்சாகத்துடன் நுழைந்திருக்கும் மாணவர்களுடன் திருச்சி சுப்பையா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளார்கள்.
