திருச்சி ரெளடி கொட்டப்பட்டு ஜெய் மீது குண்டாஸ் வழக்கில் கைது !

0
Full Page

திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ்(34). பொன்மலைப்பட்டி புதுபாலம் அருகே கடந்த மாதம் 18ஆம் தேதி இவரிடமிருந்து, கொட்டப்பட்டு இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த  ஜெய் என்கிற ஜெயக்குமார் கத்தியைக் காட்டி மிரட்டி தேவராஜ் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

Half page

இதுகுறித்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸார் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனா். இவா் மீது திருச்சி மாநகரில் 8 வழக்குகளும், மற்ற மாவட்டத்தில் 2 வழக்குகளும் உள்ளன. இதையடுத்து ஜெயக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் .அமல்ராஜ் உத்தரவிட்டார். இதன் பேரில் திருச்சி மத்திய சிறையில் ஜெயக்குமார் அடைக்கப்பட்டார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.