தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
Full Page

தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி அங்குசம் சமூக நல அறக்கட்டளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன் பேசுகையில்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் இந்திய குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு பெறலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காக இச் சட்டம் இயற்றப்பட்டது.

இச் சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை.

எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம். உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை ஆகும்

தகவல் பெற விரும்புவோர் அனுப்புனர் எந்த துறையில் தகவல் கேட்க வேண்டும் என்ற இடத்தில் பொது தகவல் அலுவலர் அத்துறையின் முகவரியினை எழுதி நீதிமன்ற பத்து ரூபாய் அஞ்சவில்லை ஒட்டி பதிவுத் தபால் மூலமாக மனு அனுப்பலாம். அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களையும் கேட்கலாம்.

இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளைத் தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக எழுதி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஒரு மனுவில் எத்தனை கேள்விகள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

Half page

இக்கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும்.

தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம் என்றார்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137
சமூக ஆர்வலர்கள் விஜயகுமார், ஜெய்கர், குமரன், ஜான் கென்னடி உட்பட பலர் பங்கேற்றார்கள்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.