டீக்கடை உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம்

0
Full Page

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, பொன்மலைக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

அப்போது 37வது வார்டு வயர்லெஸ் சாலையில்  துப்புரவு பணிகள் நடைபெறுவதையும், குடிநீர் குளோரினேஷன்  மற்றும் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது ஆப்பகுதியில்  டீ கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள், டீ கப்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து டீ கடை உரிமையாளருக்கு   அபராதத் தொகை ரூ.10,000/- விதிக்கப்பட்டது.  மேலும், மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக பராமரிக்க  அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும்,   மீறி  பயன்படுத்துபவர்களுக்கு   மாநகராட்சி அலுவலர்கள் மூலம் அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்படும் என்றார்.

Half page

பின்னர்  பொன்மலைகோட்டம் அனைத்து பகுதியில் தினசரி மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வாங்குவது தொடர்பாக வாகன ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு ஆணையர் அறிவுரை வழங்கியதுடன்,  35வது வார்டு  நாராயணன்நகர்  பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.

இந்நிகழ்வின் போது  உதவி ஆணையர் தயாநிதி, உதவிசெயற் பொறியாளர்  லோகநாதன், சுகாதாரஅலுவலர் தலைவிரிச்சான், உதவிபொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் இருந்தனர்.

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.