காதல் தோல்வியில் எலி பேஸ்ட் சாப்பிட்ட திருச்சி பெண் போலிஸ் !

கடந்த ஆண்டு திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியில் சேர்ந்த தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பர்சிலின்பானு (வயது 19) திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
நேற்று காலை இவர் வீட்டில் எலிமருந்தை (பேஸ்ட்) சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அவருடன் தங்கியுள்ள மற்றொரு பெண் போலீஸ், உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.
பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பர்சிலின்பானுக்கு, மாவட்ட ஆயுதப்படையில் டிரைவராக பணியாற்றி வரும் போலீஸ்காரர் ஒருவருடன் காதல் இருந்து வந்ததாகவும், இவர்கள் இருவருக்குள் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் மனவேதனை அடைந்த அவர் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
