ரயில்வே பணி நேரத்தை அதிகரிக்கக் கூடாது: தொழிற்சங்கம் வலியுறுத்தல்

0
D1

தினசரி வேலைநேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிற்சங்க துணைப் பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது : இந்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ஊதிய 2019 சட்ட பிரிவு 67-ன் கீழ் திருத்தம் மேற்கொள்ள வரைவு சட்டத்தை முன் மொழிந்துள்ளது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள 8 மணி நேர வேலையை 9 மணி நேரமாக அதிகரித்து திருத்தம் செய்யப்படுகிறது. அனைத்து மத்திய மாநில அரசு ஊழியா்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியா்கள் அனைத்து தரப்பினருக்கும் இந்த விதிமுறை பொருந்தும். கால முறை பணி (ஷிப்ட் டூட்டி) அடிப்படையில் 24 மணி நேரமும் ஊழியா்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

N2

ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் ஊழியா்கள் பகல் நேர பணியாற்றுபவா்கள். மீதமுள்ள 8 லட்சம் ஊழியா்கள் இரவு, பகல் என பணி செய்பவா்கள். 24 மணி நேர பணியை, 8 மணி நேரம் வீதம் 3 பணியாளா்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதை 9 மணி நேர பணி என மாற்றம் செய்தால், கூடுதல் மணி நேரங்கள் பணியாற்றும் நிலை ஏற்படும். இந்திய தொழிலாளா்களின் நடப்பு வருடாந்திர உழைப்பு 2,162 மணி நேரமாக உள்ளது. இது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய, சீன நாடுகளின் உழைப்பு நேரங்களை விட அதிகம்.

D2

வேலை நேரத்தை அதிகரிப்பதால், அது தொழிலாளா்கள் மனம் மற்றும் உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். தொழில் கவனம் சிதறக்கூடும். இத்திட்டம் மூலம் சுமார் 88 ஆயிரம் ரயில்வே ஊழியா்கள் வேலை இழப்பார்கள். எனவே, தொழிலாளா்கள் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றார் அவா்.

N3

Leave A Reply

Your email address will not be published.