பச்சிளம் ஆண் குழந்தை ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை

0
Business trichy

மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த புரோக்கரான அந்தோணியம்மாள் கடந்த 20-ந்தேதி முனியப்பன் கோவில் அருகே ஒரு தம்பதியிடம் இருந்து பிறந்து 6 நாட்களான பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கொடுத்து முருகேசன்-ராமாயி தம்பதியினர் வாங்கி உள்ளனர்.

web designer

குழந்தையை விற்ற தம்பதி கூலிவேலை செய்துவந்துள்ளனர். எச்.ஐ.வி. நோயும் இருந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். அந்த தம்பதிக்கு 3-வதாக ஆண் குழந்தை கடந்த 14-ந்தேதி பிறந்துள்ளது. இதுபற்றி அறிந்த அந்தோணியம்மாள், அந்த தம்பதியை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தையை விற்றுத்தருகிறேன் என்று கூற சம்மதித்ததோடு வெற்று பத்திரத்தில் அவர்கள் கையெழுத்து போட்டு, பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்துள்ளனர்.

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு வந்த போது, முருகேசன்-ராமாயி தம்பதி மாட்டிக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் பெற்றோர், குழந்தையை வாங்கிய முருகேசன்-ராமாயி தம்பதி, புரோக்கர் அந்தோணியம்மாள் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.