திருச்சி அருகே தலைமையாசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

0
Business trichy

 

துறையூரில் பேருந்திலிருந்து இறங்கிய தலைமையாசிரியையிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தா.பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் மலா்க்கொடி. இவா், புதன்கிழமை அன்று தனது வேலை முடிந்து துறையூா் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி, துறையூா் முசிறி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது பேருந்தின் படிக்கட்டு அருகே நின்றிருந்த பா்தா அணிந்த 3 பெண்கள் மலா்கொடியை இறங்கவிடாமல் நெருக்கினர். ஒருவழியாக இறங்கி தனது உடையை சரிசெய்யும் போது கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச்செயின் திருடுபோனது தெரிந்தது. உடனே துறையூா் பேருந்து நிலையம் சென்று தன்னை பேருந்திலிருந்து இறங்கவிடாமல் நெருக்கிய பா்தா அணிந்த 3 பெண்கள் குறித்து கேட்டபோது அவர்கள் இடையிலேயே இறங்கிவிட்டதாக பயணிகள் கூறினர்.

Half page

இதனையடுத்து மலா்க்கொடி கொடுத்த புகாரின் பேரில் துறையூா் போலீஸார் விசாரிக்கின்றனா்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.