திருச்சியில் பொலிவுறு நகரத்திட்டப்பணிகள் ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் 2.95 ஏக்கர் பரப்புகளுடன் தற்போது இயங்கி வருகிறது. அப்பேருந்து நிலையத்தினை பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் 30 பேருந்துகள் நிற்கும் வகையில் சத்திரம் பேருந்து மறு வளர்ச்சிப்பணிக்கு ரூ. 17.34 கோடி நிதி ஓதுக்கிடு செய்து பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் திருச்சி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் தலைவர் டாக்டர் மகேஷ்வரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
இப்பேருந்து நிலையத்தில் அடிதளத்தில் 350 எண்ணிக்கை இரு சக்கர வாகன நிறுத்துமிடம். தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிற்கும் வசதிகள் மற்றும் 11 கடைகள், பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாக்கும் அறை, ஓய்வறை மற்றும் கழிப்பிடம் வசதிக்ள், முதல் தளம் 17 கடைகள் + 5 கடைகள் ( உணவகங்கள்) காவல் உதவி மையம் மற்றும் கழிப்பிடம் அமைக்கப்பட உள்ளது. தற்போது நகரப் பேருந்துகளை வெளியில் நிற்கும் போது பேருந்து பயணிகளின் வசதிக்களுக்காக 6 இடங்களில் 70 தற்காலிக G.I ஷூட்டிலான நிழற்குடைகள் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் நிற்கப் போகும் பேருந்துகள் செல்லும் இடம், குடிநீர் வசதி மற்றும் மின் விளக்குகள் வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்துகள் வெளியே நிறுத்தியவுடன் முழுமையாக சத்திரம் பேருந்து நிலைய மறுவளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வேலைகள் துவக்கப்பட்டு 24 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.

பின்னர் சீர்மிகு நகர திட்டத்ன் கீழ் (1.27 ஏக்கர்) பரப்பில் பட்டவர்த் சாலையில் உள்ள பழமை வாய்ந்த புராதன பூங்காவினை ரூ. 4.00 கோடி செலவில் பூங்கா அபிவிருத்திபணிகளும் ரூ. 2.00 கோடி செலவில் புராதன சின்னங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொண்டு அழகூட்டப்படவுள்ளது. பழமை மாறாமல் ஏற்கனவே உள்ள உயரமான பகுதியில் இரு பக்கமும் தாங்கு சுவர்கள் அமைத்து திருச்சிராப்பள்ளியை 3 ம் நூற்றாண்டு முதல் 20 ம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர பேரரசர்கள், மராத்தியர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் வரை அவர்களது ஆட்சியை விளக்கும் மாடங்களும் இவர்களது உருவச்சிலையும் அமைத்து பழமையை எடுத்துக் காட்டும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட உள்ளதையும் மற்றும் மேல புலிவார்டு ரோடு பன் அடுக்குமாடிக் கார் நிறுத்துமிடம் ரூ.19.70 கோடி நிதி ஓதுக்கிடு செய்து 11,753,00 ச.மீட்டர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வுசெய்து சீர்மிகு நகர திட்டத்தின் தலைவர் டாக்டர் மகேஷ்வரன் ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுரைவழங்கினார்.

இந்த ஆய்வில் செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் பலர்உடன் உள்ளனர்.
