திருச்சி அருகே கல்லூரி விடுதி வார்டன் படுகொலை: மாணவர் கைது

0
1 full

திருச்சியை அடுத்த துறையூர் அருகே கண்ணனூரில் அமைந்துள்ள இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி விடுதியில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 45) வார்டனாக வேலை செய்து வந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (19) என்ற மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி. வேளாண்மை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அப்துல்ஹக்கீம், தேர்வில் 8 பாடங்களில் தோல்வி அடைந்ததை அவருடைய பெற்றோருக்கு விடுதி வார்டன் தகவல் தெரிவித்ததால், அவர்கள், தங்கள் மகனை நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறியதுடன், கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்ஹக்கீம், நேற்று மதியம் 1 மணி அளவில் தனது அறையில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, வார்டன் அறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வார்டன் வெங்கட்ராமனை கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் அப்துல்ஹக்கீம் கத்தியால் குத்தினார். வார்டனின் அலறல் கேட்டு விடுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, வார்டன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவர்கள் வார்டனை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 full

தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, வார்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவர் அப்துல்ஹக்கீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.