சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் நிறுவனரின் பிறந்தநாள் விழா

0
D1

 

பத்மபூஷண் ஸ்ரீ என்.இராமசுவாமி ஐயர் கல்வி வளாகத்தின் நிறுவனர் அவர்களின் 123-ஆவது பிறந்தநாள்  கடந்த 19ம் தேதி நடந்தது.

இந்நிகழ்வில் சென்னை IFE அகாடமியின் நிறுவனர் வைத்தியநாதன் மற்றும் பத்மாவைத்தியநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.   சிறப்புவிருந்தினர்    தம் சிறப்புரையில் இந்திய விடுதலைக்கு முன்பே பெண் சுதந்திரத்திற்காகப் போராடி பெண்கல்வியை வளர்த்திட்ட நிறுவனரின் தொண்டு போற்றுதற்குரியது என்றும் இக்கல்வி நிறுவனம் தொலைநோக்குப் பார்வையோடு வேலைவாய்ப்பிற்கு உதவக்கூடிய வகையில் பாடத்திட்டங்களை அமைத்து மாணவியரின் எதிர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்கி வருகிறது என்றும் கூறி நல்லதோர் சிறப்புரையாற்றினார்.

D2
N2

கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி அவர்கள் தம் உரையில் இருபதாம் நூற்றாண்டில் பெண்கல்வியைப் பாடிய பாரதியார், பாரதிதாசன் பாடல்வரிகளுக்கு உயிரூட்டிய பெருமகனார் பத்மபூஷண் ஸ்ரீ என்.இராமசுவாமி ஐயர் அவர்களின் கல்வி நிறுவனம் இலட்சக்கணக்கான மாணவியரை கல்வியில் சிறந்தவர்களாக குடும்பத்தை சமூகத்தை நாட்டைக் காப்பாற்றுவதற்கு வழிநடத்துவதற்கு உகந்தவர்களாக உருவாக்கித்தந்து கொண்டிருக்கிறது என்றும்,  நிறுவனரின் கல்விச்சேவையினைப் போற்றியும் புகழ்ந்தும் பாராட்டுரை வழங்கினார்.

பத்மபூஷண் ஸ்ரீ என்.இராமசுவாமி ஐயர் நினைவு பெண்கள் தொழில்நுட்பக்கல்லூரியின் ஆங்கிலம் மற்றும் அடிப்படைப் பொறியியல் துறையின் தலைவர் சங்கரி சமூக பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாகிய கல்வியை மாணவியர்க்கு வித்திட்ட பெருந்தகையாளர் நிறுவனர் ஸ்ரீஎன்.இராமசுவாமி ஐயர் சேவை போற்றுதற்குரியது என்றார்.

விழாவில் பணி ஓய்வுபெறும்  ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கும்  அலுவலகப்பணியாளர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்களும் நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன.  நிறுவனர் பிறந்தநாளை முன்னிட்டு 60-க்கும் மேற்பட்ட திருச்சிமாவட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை ஏறத்தாழ ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்பட்டது. மேலும் அனைத்து பள்ளி  கல்லூரி மாணவியரிடையே நடைபெற்ற பல்வேறு கலை இலக்கிய பண்பாட்டு  நுண்கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் முதல் இரண்டாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் இசை நடனம் மௌனமொழி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. முன்னதாக கல்விவளாகத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன்பஞ்சாபகேசன்  நிறுவனரின் கல்விப்பணியைப் போற்றியும் செயலரின் கல்விச்சேவையைப் புகழ்ந்தும் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தியும் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக  முதுநிலை வணிகவியல் பயிலும் மாணவி வள்ளியம்மை நன்றி கூறினார்.  விழாவில் கல்விக்குழுமத்தின் உறுப்பினர்களும் கல்விவளாத்தின் ஒருங்கிணைப்பாளர்  வசந்தாபஞ்சாபகேசன்  நிர்வாக இயக்குநர் ரமணிபஞ்சாபகேசன்  கல்வி இயக்குநர் முனைவர் கண்ணன்பஞ்சாபகேசன்,  கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி, மற்றும் துணைமுதல்வர் முனைவர் வாசுகி, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜாஸ்மின் வசந்தராணி, காமகோடி வித்யாலயா மற்றும் சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேனிலைப்பள்ளி முதல்வர்களும்  முக்கிய பிரமுகர்களும் பணி ஓய்வு பெறும் பேராசிரிய பெருமக்களும் பங்கேற்றனர்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.