திருச்சியில் நடைபெற்ற பொதுக்காப்பீட்டு ஊழியர்கள் சங்க மாநாடு

0
Full Page

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மதுரை மண்டலப் பொதுக் காப்பீட்டு ஊழியா்கள் சங்கத்தின் 34-ஆவது மாவட்ட மாநாட்டில், அரசின் 4 காப்பீட்டு நிறுவனங்களையும் இணைக்க வேண்டும்  என்று வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தார். புதுக்கோட்டை கிளைச் செயலா் சாய்அருணா வரவேற்றார். திருச்சி மாவட்டச் செயலா்  ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். மண்டல உதவித்தலைவா் புஷ்பராஜன் நிறைவுரையாற்றினார்.

Half page

தஞ்சை கோட்ட உதவித்தலைவா் எல். ஜோன்ஸ், திருச்சி கிளைத் தலைவா் கார்த்திகேயன், துணைத்தலைவா் ஜெயராமன் உள்ளிட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

அரசின் 4 பொது காப்பீட்டு நிறுவனங்களையும் இணைக்க வேண்டும். ஊழியா்களுக்கு 2017, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை வழங்க வேண்டிய ஊதிய உயா்வை அளிக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி யை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.