சட்டீஸ்கர் முதல்வரால் தமிழக கல்லூரிகளுக்கு சமூக சமுதாய விருது

0
D1

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக இரண்டு கல்லூரிகளுக்கு சட்டீஸ்கர் முதல்வரால் உயரிய விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான விருது வழங்கும் விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கல்லூரிகள் பங்கு பெற்றன. இதில் தமிழகத்திலிருந்து இரண்டு கல்லூரிகள் தேர்வு பெற்று உயரிய விருதான சமூக சமுதாய விருதினை அம்மாநில முதல்வர் பூபேஸ் பேகல் கரங்களினால் பெற்றுள்ளது. மேலும் இவ்விருதினை பெற்ற திருச்சி தூய வளனார் கல்லூரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோவிலாச்சேரி அருகே இயங்கி வரும் அன்னை கலை அறிவியல் கல்லூரியும் இந்த உயரிய விருதை பெற்றுள்ளது.

N2

இதில் தூய வளனார் கல்லூரி இவ்விருதினை 2012ஆம் ஆண்டு அதிக மரக்கன்றுகளை நட்ட தற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மேலும் இரண்டாவது முறையாக இவ்விருது இக்கல்லூரிக்கு 2019 ஆம் ஆண்டு கிடைத்து பெருமையை சேர்த்துள்ளது. அன்னை கலை அறிவியல் கல்லூரிக்கு இவ்விருது முதல் முறையாக வழங்கப்பட்டு தஞ்சை மாவட்டத்திற்கு ஒரு முன்னுதாரண கல்லூரியாக விளங்கியுள்ளது.

D2

இவ்விருதுகள் இவ்விரண்டு கல்லூரிகளுக்கும் வழங்கப்பட காரணம்… கல்லூரி வாழ்வில் மாணவர்களை சமுதாயப் பணிகளுக்கு ஊக்கப்படுத்தி அவர்களை சமூக சிந்தனை வாதிகளாகவும், சமூகத்தில் அக்கறை கொண்ட மாணவர்களாகவும் உருவாக்கும் விதமாக  செயல்பட்டதால் இவ்விரு கல்லூரிகளுக்கும் ஆரோ பார்ட் குளோபல் விருது வழங்கப்பட்டது.

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.