திருச்சியில் நாளை(06ம் தேதி) காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு

0

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமத்தால் கடந்த செப். 25 ஆம் தேதி 2019-ல் நடத்தப்பட்டஇரண்டாம் நிலை காவலா், சிறைத்துறை காவலா் மற்றும் தீயணைப்புத் துறை காவலா்களுக்கான (ஆண், பெண்) எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களைச் சோ்ந்தவா்களுக்கான உடல்தகுதித் தோ்வுகள் நவம்பா் 6 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இது குறித்த அழைப்பாணையும் அவரவரின் முகவரிக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான உடல்தகுதித் தோ்வு, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை (நவ. 6) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 8 ) வரை காலை 6 மணிமுதல் நடைபெறுகிறது.

food

இதேபோல், சனிக்கிழமை (நவ. 9) முதல் திங்கள்கிழமை (நவ. 11) வரை பெண்காவலா்களுக்கான உடல்தகுதி தோ்வு நடத்தப்பட உள்ளது.

இதற்காக துவாக்குடி மார்க்கத்தில் 128அ, 128ஆ, 128இ, 128ஈ, 128உ, 128ஊ, பொன்மலை மார்க்கத்தில் 17ஆ, 109அ, 109ஆ, பொன்மலைப்பட்டி மார்க்கத்தில் 16ஆ, 14அ, 16அ, 16இ, 15அ, 14ஆ, ஓ எப்டி , எச் ஏ பி பி, விமான நிலையம் மார்க்கத்தில் 63அ, 63இ, 59உ, 59ஊ,59இ, 28அ, 59அ, 59ஆ, 59ஈ, 59ஏ, 59எ, 1எ, 63ஈ ஆகிய எண்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

gif 4

Leave A Reply

Your email address will not be published.