குண்டும் குழியுமாக உள்ள பச்சைமலை சாலைகள்

0
Full Page

துறையூர் பச்சமலை சாலை மழையால் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Half page

துறையூர் அடுத்த பச்சைமலை வண்ணாடு ஊராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மணலோடையில் இருந்து தோனூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே சாலைகளை பராமரிக்காததால் பச்சைமலை பல பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளாகவே இருப்பதாலும், சாலைகள் சரிவர தெரியாததாலும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இன்னும் சில நாட்களில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை நடைபெற உள்ளது. அப்போது அறுவடை செய்த மரவள்ளிகிழங்கை லாரிகள் மூலம் விற்பனைக்கு கீழே கொண்டு செல்வார்கள். இந்நிலையில் சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால், தமிழக அரசு பச்சைமலை சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.