வரத்து குறைவால் திருச்சி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு

0
full

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ஆனது. வெளிச்சந்தைகளில் வெங்காயம் ரூ.90 வரை விற்பனை ஆனது. அதன் பின்னர் அக்டோபரில் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனை ஆகி வந்தது.

தற்போது பல்லாரி வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. நேற்று காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ பெல்லாரி வெங்காயம் ரூ.80க்கும், சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 90க்கும் விற்பனை ஆனது. கடந்த மாதம் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 40 முதல் 50 வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

இதே போல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. தற்போது காய்கறிகள் (ஒரு கிலோ) விற்கப்பட்டு வரும் விலையும், கடந்த மாத விலையும் (அடைப்பு குறிக்குள்) கீழே கொடுக்கப்பட்டுள்ளது

poster
ukr

கத்தரிக்காய் – ரூ.30 (ரூ.15), உருளை கிழங்கு – ரூ.80 (ரூ.20), தக்காளி – ரூ.30 (ரூ.15), கேரட் – ரூ.50 (ரூ.25), பீன்ஸ் -ரூ.40 (ரூ.30), பீட்ரூட் ரூ.35 (ரூ.20), வெண்டைக்காய் ரூ.40 (ரூ.20), முள்ளங்கி -ரூ.30 (ரூ.15), அவரைக்காய் – ரூ. 50 (ரூ.30), புடலங்காய் ரூ.40 (ரூ.20), முருங்கை காய் – ரூ.150 (ரூ.60), மாங்காய் ரூ.60 (ரூ.30), பாகற்காய் ரூ.40 (ரூ.25). மல்லி கட்டு ரூ. 50 (ரூ.20).

காய்கறிகள் விலை உயர்வுக்கான காரணம் பற்றி திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணனிடம் கேட்டபோது,

தமிழகத்திலும் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து விட்டது. முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வந்ததாலும் காய்கறிகள் விலை உயர்ந்து விட்டது. மழை பெய்வது நின்றால் காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.