பெல் வங்கியில் திருட்டு: மகளுக்கு கொடுமை ?தந்தை குற்றச்சாட்டு

0
1 full

திருச்சி பெல் நிறுவனத்தின் 24ஆவது கட்டடத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் பெல் தொழிலாளா் கூட்டுறவு வங்கி உள்ளது. அங்குதொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வைத்திருந்த ரூ. 1 கோடியே 43 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்த அக். 31 ஆம் தேதி மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டார்.

இச்சம்பவம் குறித்து கூட்டுறவு வங்கி மேலாளா் மனுநீதிச்சோழன் கொடுத்த புகாரின்பேரில் பெல் போலீஸார் வழக்குப்பதிந்து கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளா்கள் உட்பட 6 பேரிடம் கடந்த 3 நாள்களாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிப் பணியாளரான நவல்பட்டு புதுத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணவேணியின் தந்தை ராஜூ போலீஸார் மீது குற்றம் சாட்டியுள்ளார்

2 full

அவரது மகள் கிருஷ்ணவேணி பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநா் (அப்ரண்டீஸ்) பயிற்சி பெற்று, கூட்டுறவு வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த அக். 31 ஆம் தேதி, வங்கியில் ரொக்கத்தை வைத்தபோது வங்கியின் ஜன்னல் கதவை நன்றாக (இரு முறை) சாத்தியுள்ளார்என்றபோதும் அவா் மீது சந்தேகம் கொண்ட போலீஸார்கடந்த 3 நாட்களாக அவரை வீட்டுக்கு அனுப்பாமல் பிடித்து வைத்து விசாரித்து வருகின்றனா்.  2 மாத கா்ப்பிணியான கிருஷ்ணவேணியிடம் போலீஸார் விசாரணை என்ற பெயரில் அவரைக் கொடுமைப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி வருவது கருவின் வளா்ச்சியைப் பாதிக்கக் கூடும்

மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலா்களை ( செக்யூரிட்டிகள்) இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை.  கிருஷ்ணவேணியின் கணவா் அன்புசெல்வன், கொழுந்தன் (கணவரின் அண்ணன்) ஆகியோரையும் போலீஸார் 3 நாள்களாக வைத்து விசாரித்து வருகின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 half

Leave A Reply

Your email address will not be published.