திருச்சி அருகே அண்ணன் இறந்ததால் தங்கை திருமணம் நிறுத்தம்

0
Business trichy

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டி காட்டுவீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தனபால் (வயது 29). பெயிண்டர். இவருடைய தங்கைக்கும், முசிறி அருகே உடையான்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை திருமணம் நடைபெற இருந்ததால், நேற்று முன்தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணப்பெண்ணின் அண்ணனான தனபால் செய்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள வயல் பகுதிக்கு சென்ற தனபால் அப்போது, இருளில் கால் இடறி, அருகில் இருந்த தண்ணீரில்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தனது மகன் நீண்ட நேரமாகியும் காணாததால் அவரைத்தேடிச் சென்ற தந்தை அவர் கிணற்று’க்குள் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனபாலை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்..
மணப்பெண்ணின் அண்ணன் இறந்ததால், நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Half page

Leave A Reply

Your email address will not be published.