திருச்சி வயலூரில் இன்று சூரசம்ஹார விழா

இன்று முருகன் கோயில் கொண்டிருக்கும் ஆலயங்களில் சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக 7 நாட்கள் முருகனே விரதம் இருந்து சூரசம்ஹாரம் நிகழ்த்தினார் என்பர். பார்வதிதேவியான சக்தியிடம் வெற்றிவேல் வாங்கிய முருகன் சூரசம்ஹாரம் செய்தார்.

வயலூரில் கடந்த 29ம் தேதி ஆரம்பித்த கந்தர் ஷஷ்டி விழாவில் சிங்காரவேலர் கேடயவாகனம் மற்றும் சேஷ வாகனம், ரிஷப வாகனம் அன்னவாகனம், போன்றவற்றில் வலம் வந்ததுடன், சிங்கார வேலருக்கு லட்சார்ச்சனையும், சண்முகார்ச்சனையும் நடைபெற்றது.
சூரசம்ஹார விழா இன்று இரவு 7.30 நடைபெற உள்ளது. அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமை முருகனுக்கு சிறப்பு அபிஷே பூஜை நடைபெற்று தேவசேனா-சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடைபெறும். அத்துடன் கடந்த 29ம் தேதி ஆரம்பித்த கந்தர்ஷஷ்டி விழாவானது. இனிதே நிறைவுறும்.
