தமிழ்நாடு உருவான நாள்

0

நவம்பர் 1 இன்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கி ‘மெட்ராஸ் ராஜஸ்தானியையும்’ என ஒற்றை மாநிலமாக இருந்து வந்தது. இந்த சூழலை மாற்றி, தமிழ்நாட்டைத் தனி மாநிலமாக, மொழிவாரி மாநிலமாகப் பிரிக்க வலியுறுத்தி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து 1953ஆம் ஆண்டு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது. தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உள்படப் பலர் போராட்டம் நடத்தியதன் விளைவாக 1956ஆம் ஆண்டு நவ. 1 ஆம் தேதி, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட், ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனப் பிரிக்கப்பட்டது. தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவ. 1 ஆம் தேதியைத் தமிழ்நாடு நாள் என அரசு அறிவித்துள்ளது

November 1 – தமிழ்நாடு தினம் (தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்) :

‌சந்தா 1

1956 நவம்பர் 1ம் தேதி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. எஞ்சியுள்ள தமிழ் மாநிலத்துடன் அதே நாளில் கன்னியாகுமரி முனை மீட்கப்பட்டு தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சேர, சோழ, பாண்டிய மண்டலங்களை ஒன்றாக்கி, ஒருமைப்பட்ட தமிழ் மாநிலம் கண்ட நவம்பர் 1ம் தேதி தமிழகம் உருவான நாள்.

சந்தா 2

மற்ற மாநில அரசுகள் அரசு விழாவாகக் கொண்டாடிய இந்த நாளை தமிழக அரசோ, மற்ற தமிழ் இயக்கங்களோ கண்டு கொள்ளாமல் விட்டது வேதனைக்குரியது. இந்த நாளை தமிழ்நாடு தவிர ஏனைய மாநிலங்கள் ராஜ உத்சவ திருவிழாக கொண்டாடி மகிழ்கின்றனர். கர்நாடகாவில் ஒரு மாதம் வரை கொண்டாடுகின்றனர் . இந்த நாளில் கன்னட கொடி ஏற்றி , கன்னட தாய்க்கு மரியாதை செலுத்தி கன்னட தேசிய எழுச்சி திருநாளாக கொண்டாடுகின்றனர் கன்னடர்கள். அதே போல் தெலுங்கர்களும் கொண்டாடுகின்றனர்.

தமிழர்கள் அனைவரும் ஒரே ஆட்சியின் கீழ், தமிழ்நாடு என்ற அரசின் கீழ் , தமிழ்நாடு என்ற நிலப்பரப்பின் கீழ், தமிழ்நாடு என்ற அடையாளத்தின் கீழ் வந்த தினம் இந்த நவம்பர் 1 ஆம் நாள் தான் . அதுவரை தமிழர்கள் தமிழ்நாடு என்ற ஒரு நாட்டின் கீழ் எப்போதும் வாழ்ந்ததில்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம் அல்லவா! தமிழர்கள் அனைவரும் இந்திய சுதந்திர தினத்தை விட அதிமாக நாம் போற்ற வேண்டிய தினம் அல்லவா ?

நம்முடைய தமிழர் நாட்டை பேணிப் பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை , மொழியை, உரிமைகளை பாதுக்காக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் வேண்டும் . அந்த வகையில் தமிழர்கள் அனைவரும் தமிழர் கொடியேற்றி கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் தமிழக அரசு நவம்பர் 1 ஆம் நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் . அன்று தமிழகம் முழுவதும் தமிழர் வரலாறு , பண்பாடு குறித்த கண்காட்சி இடம்பெற வேண்டும் .

இதை நாம் இப்போது செய்யத் தவறினால் நாளை தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும்.
நவம்பர் 1 தேதியை தமிழர் பெருவிழாவாக கொண்டாடுவோம். தமிழரின் அடையாளத்தை தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

Leave A Reply

Your email address will not be published.