திருச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதல் நிலை பரிசோதனை

திருச்சிமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதல் நிலை பரிசோதனை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரப்பட்டுள்ளது. அங்கீகரிக்க அனைத்து கட்சி பிரநிதிகள் முன்னிலையில் 100 சதவீதம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி மையம் போன்றவை தயார் நிலையில் உள்ளது. 5608 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 2984 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரமும் வரப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் பெல்நிறுவன பணியாளர்களை கொண்டு முதல் கட்ட பரிசோதனை இன்று நடைபெறுகிறது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநகராட்சி 3 நகராட்சி 16 பேரூராட்சிகள் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களில் பயன்படுத்தப்பட உள்ளது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக இம்மாவட்டத்தில் 1142 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. ஊராட்சிப் பகுதிகளின் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் நகர்புறத்தில் 1024201 வாக்காளர்களும் ஊரகப்பகுதிகளில் 1221017 வாக்காளர்களும் ஆக மொத்தம் 2245218 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) து.பாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லதா மற்றும் மாநகராட்சி நிர்வாக அலுவலர் சதிஸ்குமார் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
