திருச்சி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

0

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த தொழில் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகின்றது.தற்போது 2016-17, 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுகளுக்காக மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் விருதுகளுக்காக விண்ணப்பிக்கலாம்

2016-17 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கு கீழ்க்காணும் இனங்களில் தகுதியுடைய குறு சிறு மற்றும் உற்பத்தி தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாநில அளவிலான சிறந்த வுpவசாயம் சார்ந்த தொழில் நிறுவனத்திற்கான விருது.

மாநில அளவிலான சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கான விருது.

மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது.

மாநில அளவிலான சிறந்த ஏற்றுமதி மற்றும் தரச்சான்று பெற்ற தொழில் நிறுவனத்திற்கான விருது.

மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது.

சிறந்த வங்கியாளருக்கான விருது.

மாநில அளவிலான விருதுகளுக்கு ரூ.50000 ரொக்கப் பரிசாகவும் ரூ. 15000 மதிப்புள்ள நினைவுப் பரிசும்மாவட்ட அளவிலான விருதுகளுக்கு ரூ. 15000 மதிப்புள்ள நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

விருதிற்காக விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் உற்பத்தியில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். முறையாக பதிவு செய்யபட்ட தொழில் நிறுவனமாக இருத்தல் அவசியம். விருதிற்கான ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்கு பட்டய கணக்கரிடமிருந்து பெறப்பட்ட இருப்புநிலைகுறிப்பு மற்றும் விற்றுமுதல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணியாளர் நலத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விபரம் தரச்சான்றுகள் ஏதேனும் பெற்றிருப்பின் அது குறித்த விபரம் மற்றும் இதற்கு முன்னர் ஏதேனும் விருதுகள் பெற்றிருப்பின் அவ்விருதுகள் குறித்த விபரங்களுடன் www.msmeonline.tn.gov.in/awards என்ற இணையதளம் வாயிலாக 30.11.2019க்குள் விண்ணப்பிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்கேட்டுக் கொள்கிறார்.

மேலும் விபரங்களுக்கு தொழில் முனைவோர் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை திருச்சி -1 (தொலைபேசி எண் 0431-2460331) என்ற முகவரியை அணுகலாம்.

 

 

Leave A Reply

Your email address will not be published.